பொதுவாக உலகில் உள்ள ஜீவவாசிகளுக்கு பிரச்சனைகள் பல ரூபத்தில் வரும் அதிலும் குறிப்பாக இந்த இளசுகளுக்கு பிரச்சனை என்ற ஒன்று வந்தால் அது காதல் பிரச்சனையாக தான் இருக்கிறது . அதிலும் சின்னத்திரை முதல் பெரிய திரை வரை காதல் திருமணம் செய்த எத்தனையோ இளம் ஜோடிகள் பலருக்கு முன்னுதாரணமாய் வாழ்ந்துகாட்டி வரும் நிலையில் சில ஜோடிகள் இப்படி வாழவே கூடாது என்பதற்கு உதாரணமாய் வாழ்ந்து வருகின்றனர் .
அந்தவகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் நடிகர் அர்ணவை ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்து பின்னர் சில பல பிரச்சனைகளால் இருவரும் பிரிந்துவிட்டார்கள் .

திட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக நகமும் சதையுமான இருந்து காதல் திருமணம் செய்துகொண்ட இந்த சின்னத்திரை ஜோடி திடீரென பிரிந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது . இந்த பிரச்சனை நாளுக்கு நாள் அதிகமாகி வர நடிகை திவ்யாவிற்கு அண்மையில் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில் நடிகை திவ்யா , காதல் கணவர் அர்ணவ் குறித்து ஒரு பேட்டியில் திடுக்கிடும் பல தகவல்களை கூறியுள்ளார் . அந்த பேட்டியில் அவர் கூறியதாவது :

அர்ணவுக்கும் எனக்கும் பிரச்சனை போய்க் கொண்டிருந்த சமயத்தில் எனக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் மெசேஜ் செய்தார். பிரசன்னா என்கிற என்னுடைய நெருங்கிய தோழியையும் நடிகர் அர்ணவ் நம்ப வைத்து ஏமாத்திட்டார் என அவருடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் எனக்கு அனுப்பி வைத்தார். அதைப்பார்த்ததும் நான் அப்படியே ஷாக் ஆகிவிட்டேன்.
அர்ணவுக்கு இலங்கை நாட்டை சேர்ந்த இளம் பெண் பிரசன்னா என்பவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது, என்னவெல்லாம் நடந்தது என அந்த பெண் ஒன்று விடாமல் கூறியிருந்தார் .
ஒரு ரசிகையாக பேச வந்த இளம் பெண்ணை காதலித்து, கர்ப்பமாக்கி பின் அந்த இலங்கை பெண்ணிடம் ஏதேதோ பேசி என்னிடம் பிரச்னை செய்தது போல் அவரிடமும் பிரச்னை செய்து அந்த பெண்ணை கைவிட்டுள்ளார் . இதற்கு அர்ணவின் உயிர் நண்பரே ஆதாரம் என திவ்யா கூறியுள்ளார்.

ஏற்கனவே திவ்யா காவல்துறையிடம் கொடுத்த புகாரில் அர்ணவ் ஜெயிலுக்கு சென்று வந்த நிலையில் தற்போது திவ்யா , காதல் கணவர் அர்ணவ் குறித்து மேலும் ஒரு புகாரை பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .