பொதுமக்களை காக்க வேண்டிய காவல்துறை அதிகாரியே (chain robbery) செயின் பறிப்பில் ஈடுபட்டு உயர் அதிகாரிகளால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 27ம் தேதி அடுத்தடுத்து 2 பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட செட்டிபாளையம் தலைமைக் காவலர் சபரிகிரி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் செட்டிபாளையம் பகுதியிலும் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணை முடிந்த பின் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் சபரிகிரியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர் .
இந்த நிலையில், சபரிகிரியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
Also Read : https://itamiltv.com/passage-of-resolutions-taken-by-kongu-nadu-peoples-national-party/
பொதுமக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் அவர்களை ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டிய
காவல் துறையை சேர்ந்த காவலர் இதுபோன்ற (chain robbery) கீழ் தனமான குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.