நாசா கொண்டு வந்துள்ள புதிய திட்டம் ஒன்றின் மூலம், காதலர்கள் விண்வெளிகுச் சென்று ரொமான்ஸ் (sex in space) செய்யலாம் என தகவல் வெளியாகி காதலர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காலத்தில் கூறுவதைப்போல காதலனையோ, காதலியையோ சந்திக்க ஏழு கடல் ஏழு மலை தாண்டி சென்ற காலம் மாறி இப்போது காதல், ரொமான்ஸ் மற்றும் உடலுறவுக்கான வாய்ப்பு விண்வெளியில் (sex in space) சாத்தியமாகும் என்று கூறினால் நம்ப முடிகிறதா. ஆம்.. இது ஏதோ, படத்தின் கதையல்ல, உண்மைதான்.
நீங்கள் உங்கள் துணையுடன் விண்வெளிக்குச் சென்று ரொமான்ஸ் செய்ய விரும்பினால், நாசாவின் இந்த திட்டத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுவரையிலும், எந்த மனிதனும் விண்வெளிகுச் சென்று காதல் செய்ததில்லை. ஆனால், அது இப்போது சாத்தியமாகியுள்ளது. புதிய காதல் உலகத்திற்கான ஏற்பாடுகளை நாசா நிறைவு செய்துள்ளது. மேலும், நாசா தனது இந்த புதிய விண்வெளி ரொமான்ஸ் திட்டத்திற்கு ’68 மைல் ஹை கிளப்’ என்று பெயரிட்டு உள்ளது.
இந்த கிளப்பில் இணைவதன் மூலமாக நீங்கள் உங்கள் துணையுடன் விண்வெளியில் காதல் மற்றும் உடலுறவை மேற்கொள்ளலாம். இதற்கான முன்பதிவு தொடங்க உள்ளதாகவும், இதற்காக நாசா அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த பணிகள் நிறைவடையும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடிய விரைவில் மக்கள் விண்வெளியில் காதல் செய்ய முன்பதிவு செய்ய முடியும் என நாசா விண்வெளி வீரர் ஜோஸ் ஹெர்னாண்டஸ் முழுமையான தகவலை அளித்துள்ளார். இந்த ஆண்டு, வணிக விமானங்களுக்கு கிரீன் சிக்னல் கிடைத்தவுடன் இது சாத்தியமாகும் என்று அவர் கூறினார்.
மேலும், இவ்வாறு விண்வெளியில் காதல் செய்வது அல்லது உடலுறவு கொள்வது சட்டவிரோதமானது அல்ல என்றும் அவர் கூறினார். ஆனால், இதில் மிக முக்கியமான சிக்கல் என்னவென்றால், இந்த விண்வெளிப் பயணத்தின் செலவு ஒரு பயணிக்கு ரூ.3 கோடியே 75 லட்சம் கட்டணம் எனவும், உங்கள் துணையின் விண்வெளிக் காதலுக்கும் சேர்த்து ஆகும் செலவு ரூ.7 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்றும் ஜோஸ் கூறினார்.