பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனு – நீதிபதி வழங்கிய நூதன நிபந்தனை ஜாமீன்

sexual-harrasment-accused-gets-bail-on-a-peculiar-condition
sexual harrasment accused gets bail on a peculiar condition

பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி நூதனமான நிபந்தனை விதித்துள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னவில் உள்ள மஜோர் கிராமத்தை சேர்ந்தவர் லாலன் குமார். 20 வயதுடைய இவர் அந்த கிராமத்தில் சலவை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ற குற்றச்சட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, 5 மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் லாலன் குமார், தனக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு அளித்தார். அந்த பெண்கள் மீதான தனது மரியாதையை வெளிப்படுத்த, தனது தொழில் ரீதியாக பெண்களுக்கு சமூக சேவை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

sexual-harrasment-accused-gets-bail-on-a-peculiar-condition
sexual harrasment accused gets bail on a peculiar condition

இந்த மனுவை விசாரித்த ஜஞ்சர்பூர் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அவினாஷ் குமார், 6 மாத காலத்திற்கு மஜோர் கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களின் துணிகளையும் சொந்த செலவில் துவைத்து சலவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளார்.
நீதிமன்றத்தின் இந்த நூதன நிபந்தனையை அறிந்த அந்த கிராமத்து பெண்கள், இதுபோன்ற உத்தரவு வரலாற்று சிறப்புமிக்கது என்றும் இது பெண்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Total
0
Shares
Related Posts