பிரதமர் மோடி(pm modi) தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் காணொலி வாயிலாக பங்கேற்கின்றனர்.
அதன்பின் கடந்த 2005-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பில் இந்தியா பார்வையாளராக பங்கேற்றது. கடந்த 2017-ம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் எஸ்சிஓ அமைப்பின் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டன.
இதனை தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை காணொலி மூலம் இந்தியா தலைமை தாங்கி நடத்த உள்ளது.
இந்த உச்சி மாநாட்டில், போதை பொருள் கடத்தல் மற்றும் தீவிரவாத ஒழிப்பு ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தி அதுபற்றி தலைவர்கள் விவாதத்தில் ஈடுபட உள்ளனர்.