திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக ‘மண்டேலா’ பட நடிகை ஷீலா அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் சீலா ராஜ்குமார். 2016 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ஆறாது சினம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து ,2017 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த அழகிய தமிழ் மகள் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார்.அதன் பிறகு ,அசுரவதம், நம்ம வீட்டுபிள்ளை ,கும்பளாங்கி நைட்ஸ், மண்டேலா,திரெளபதி , டூலெட் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
குறிப்பாக இவர் நடித்த ‘டூலெட்’ திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை வென்றது.
இந்த நிலையில்,நாளைய இயக்குனரில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட தம்பி சோழர் என்பவரை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் குரும்படங்களில் நடித்த போது காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இவர்களது காதலுக்கு சம்மதம் அளிக்காததால், பெற்றோர்களில் எதிர்ப்பை மீறி வித்தியாசமான முறையில்,நடுகடலில் மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
தற்போது திருமண உறவிலிருந்து வெளியேறுவதாக நடிகை ஷீலா அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.