இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்று காலை வங்கதேச விமானம் இந்தியாவில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், ஷேக் ஹசீனா இந்தியாவிலேயே இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் அடைக்கலம் கோரியுள்ள ஷேக் ஹசீனா . யுஏஇ அல்லது இங்கிலாந்தின் அனுமதி கிடைக்கும் வரை தொடர்ந்து இந்தியாவிலேயே தங்கி இருப்பார் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தால், நேற்று பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்
ஷேக் ஹசீனா இந்தியா வந்திறங்கிய வங்கதேச ராணுவ விமானம், இன்று காலை புறப்பட்டு சென்ற நிலையில், அதில் ஷேக் ஹசீனாவும் இருந்தாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள ரகசிய இடத்தில் பலத்த பாதுகாப்புடன் ஷேக் ஹசீனா தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.