100 died boat capsized sea : நடுக்கடலில் படகு கவிழ்ந்து பெரும் விபத்து..
படகில் பயணித்த 100 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்குள்ளான படகில், ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் காலரா நோய் பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக இவர்கள் கடல் வழியாக பயணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆறு மாத காலமாகவே தென்னாப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் காலரா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க : கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான தொற்று நோய் – வெளியான அதிர்ச்சி தகவல்!
அந்நாட்டில் கடந்த சில நாட்களில் மட்டுமே சுமார் 15,000க்கும் அதிகமானவர்கள் காலரா நோய் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
இந்த சூழலில் தான் காலரா நோய் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக மொசாம்பிக்கில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர்.
அப்படி, சுமார் 130 பயணிகளுடன் புறப்பட்ட படகு ஒன்று, நம்புலா மாகாணத்தில் இருந்து வேறு ஒரு தீவை அடைய முயன்ற போது விபத்தில் சிக்கி, நீரில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 26 பேர் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நீருக்குள் மூழ்கி வித்துக்குள்ளான படகில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான பயணிகளை ஏற்றி சென்றது தான், இந்த விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
காலரா நோய்க்குப் பயந்து தப்பிச்செல்ல முயன்றவர்கள் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது 100 died boat capsized sea.
இதையும் படிங்க : “நல்லவர்களை தேர்ந்தெடுத்து அனுப்புங்கள்”