சென்னையில், நடிப்பிற்காக படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பார்த்த கார்த்திக் என்ற 11 வயது சிறுவன் (school student) எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதவரம் அடுத்த புழல் புத்தகரம் காமராஜர் நகரைச் சேர்ந்த சீனிவாசன், என்பவருடைய மகன் கார்த்திக் (11) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார் (school student) இந்நிலையில், சீனிவாசனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதனையடுத்து, நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டில் இருந்த அண்ணன் தம்பி இருவரும் தூக்கு போடுவது எப்படி என்பது பற்றி நடிப்பிற்காக படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு பார்த்துள்ளனர். இந்நிலையில் எதிர்பாராத விதமாக அதில் சிக்கி தூக்கிட்டு கார்த்திக் உயிரிழந்துள்ளார்.
இதனை அடுத்து வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த அண்ணன் தன் வீட்டின் அருகே வேலை செய்திருந்தவரை அழைத்து நடந்தவற்ற்றைக் கூறியுள்ளான். இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, தகவலின் பேரில் விரைந்து வந்த புழல் காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின்பு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், கார்த்திக்கின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த கார்த்தியின் தாய் கதறி அழுவது பார்ப்போர் கண்களை கலங்க வைத்தது. மேலும், புழல் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.