singer suchitra interview : பாடகி சுசித்ரா தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றியும் பயில்வான் ரங்கநாதன், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றியும் பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
ரேடியோவில் ஆர்.ஜேவாக பணியாற்றி அதன் பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளிவந்த லேசா லேசா படத்தின் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் சுசித்ரா.
தொடர்ந்து மன்மதன், வல்லவன், போக்கிரி, ஜேஜே, காக்க காக்க, பொல்லாதவன் என அடுத்தடுத்து வெளியான படங்களில் இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இதையும் படிங்க : May 13 Gold Rate : தொடர் சரிவில் தங்கம் விலை!
அது மட்டுமல்லாமல் அவர் ஒரு சிறந்த டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் தான் தற்போது அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் பல பகீர் தகவல்களை கொட்டி தீர்த்துள்ளார்.
அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது (singer suchitra interview), “சுச்சி லீக்ஸ் அப்படின்னு வெளிவந்த எல்லா போட்டோஸ்மே ஒரு பிராங்க். என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ், ஆண்ட்ரியா, த்ரிஷா இன்னும் சிலர் இவங்க எல்லாரும் ஒரு கேங்.
இவங்க எல்லாம் சேர்ந்து எனக்கு பிராங்க் பண்ணிட்டாங்க. என்னுடைய twitter பாஸ்வேர்டை என்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் வாங்கி எனக்கு இந்த மாதிரி ஒரு பிராங்க் பண்ணிட்டாங்க.
அவங்களே அவங்களுடைய போட்டோஸ சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் என்னுடைய twitter பக்கத்தில் போட்டுட்டு அதன் பிறகு அவங்களே நாங்க சுசித்ராவ மன்னிச்சிட்டோம். நாங்க அவங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்க மாட்டோம் அப்படின்னு சொல்றாங்க.
என்ன எந்த அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாக்கிட்டாங்கன்னு கடவுள் பாத்துட்டு தான் இருக்காரு. கடவுள் அவங்க யாரையும் சும்மா விட மாட்டார். நான் கடவுள் கிட்ட சொல்லி அழுதுட்டு தான் இருக்கேன்.
அதுக்கேத்த மாதிரி கடவுளும் அவங்களுக்கு தண்டனைகளை கொடுத்துட்டு தான் இருக்காரு. அது மட்டும் இல்லாம பயில்வான் ரங்கநாதன் குறைந்தது ஆறு மாசத்துக்கு ஒரு முறையாவது என்னுடைய பேர அவருடைய வீடியோக்கள்ல சொல்லிட்டு இருக்காரு.
இது ரொம்பவே எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்துது. அவருக்கு கார்த்திக் குமாரும், தனுஷும் பணம் கொடுத்து தான் பேச வைக்கிறாங்க. பயில்வான் ரங்கநாதன நேரில் பார்த்தா சுட்டு கொன்னுடுவேன். இல்ல கத்தியால குத்தி கொலை பண்ணிடுவேன்.
தனுஷ் ஒரு பூமரு.. மெச்சூரிட்டியே கிடையாது அவனுக்கு.. ஆனா, அவன் ஒரு நல்ல அப்பா.. ஆனா ஐஸ்வர்யாராய் ஒரு மோசமான அம்மா.
எனக்கு தனுஷ் ஜென்ம எதிரி கிடையாது. அவன் எனக்கு பிராங்க் பண்ணி இருக்கான். அத நான் அப்புறமா கவனிச்சுக்கிறேன். அவன் கை கால உடைச்சிட்டு ஜெயிலுக்கு போக கூட நான் தயாராக இருக்கிறேன்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்னவோ விவாகரத்துக்கு அப்புறம்தான் அவங்களுக்கு ஃப்ரீடம் கிடைத்த மாதிரி படம் டைரக்ட் பண்ணுவாங்களாம், டான்ஸ் ஆடுவாங்களாம், நடிப்பாங்களாம்..
ஏன் இதுவரைக்கும் அவங்களுடைய திறமைகளை வெளி காட்ட விடாம தனுஷ் தான் அவர்களை அடக்கி வைத்திருந்தாரா இப்படி அடுக்கடுக்கான கேள்விகளையும் பகிர் தகவல்களையும் கொட்டி தீர்த்து இருக்கிறார் சுசித்ரா.