தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நம்ப வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன் . பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள SKவுக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது .
கொரோனவால் துவண்டு கிடந்த தமிழ் சினிமாவை உயிர் நண்பன் நெல்சன் உடன் கைகோர்த்து டாக்டர், என்ற படத்தின் மூலம் அனைவரையும் மீண்டும் திரையரங்குகளுக்கு வரவழைத்து தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் கொடுத்தது யாராலும் மறக்க முடியாது . இவரே தயாரித்து நடித்த அந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது .

டாக்டர் படத்திற்கு பிறகு சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்த சிவகார்த்திகேயனின் லைனப்பில் மாவீரன் , அயலான் உள்ளிட்ட படங்கள் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது .
இந்நிலையில் அன்மையில் நடைபெற்ற உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீடு விழாவுக்கு கமல்ஹாசன், வெற்றி மாறன், சூரி, விக்னேஷ் சிவன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அந்த விழாவுக்கு சிவகார்த்திகேயனும் மிரள வைக்கும் தோற்றத்தில் வந்திருந்தார் . கோடைக்காலம் என்ற போதிலும், சிவகார்த்திகேயன் பின்னப்பட்ட தொப்பியுடன் விழாவில் பங்கேற்றது பெரும் பேசுபொருளாக மாறியது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திற்காக தான் நான் இந்த கெட்டப்பில் தொப்பியுடன் உள்ளேன் என்பதை கூறினார் . ‘எஸ்கே 21’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் வரை தனது முழு தோற்றத்தை காண்பிக்க கூடாது என இயக்குநர் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார் .

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார் . மேலும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது .