சிவகார்த்திகேயனின் துணிச்சலான நடிப்பில் (Amaran Issue) உருவாகி உள்ள அமரன் படத்திற்கு எதிராக தற்போது போராட்டங்கள் வலுத்து வருகிறது .
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி உள்ள படம் தான் அமரன் . இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
இதுமட்டுமின்றி இந்த படத்தில் எஸ்.கே மற்றும் சாய் பல்லவியுடன் சேர்ந்து ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் அப்டேட் கேட்டு நீண்ட நாட்களாக ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் படக்குழு மாபெரும் இரு அப்டேடுகளை வெளியிட்டது .
சிவகார்த்திகேயனின் முரட்டு தனமான நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு அமரன் என பெயரிடப்பட்டது .
முழுக்க முழுக்க ராணுவ படமாக உருவாகி உள்ள இந்த படம் ஒரு உண்மை கதை என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இந்தபடத்தின் டீசரையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்தது .
முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி உள்ள இந்த படம் சிவர்த்திகேயன் இதுவரை நடித்திராத கதையம்சம் கொண்டது.
மேலும் இந்த டீசரில் சிவகார்த்திகேயன் பேசும் வசனங்கள் அனைத்தும் படு மாஸாக இருப்பதாகவும் நிச்சயம் இந்த நம்ப எஸ்.கேவுக்கு வெற்றி படமாக அமையும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது அமரன் படத்திற்கு எதிராக தற்போது போராட்டங்கள் வலுத்து வருகிறது .
இந்த படத்தில் காஷ்மீர் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டி இருப்பதாக கூறி சில அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர் .
ஏற்கனவே கமலின் விஸ்வரூபம் படம் வெளியாக இருந்த போதும் சர்ச்சையில் சிக்கி இருந்தது போலவே தற்போது கமல் தயாரித்து வெளியிட இருக்கும் அமரன் படமும் சிக்கலில் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : https://itamiltv.com/southern-districts-white-rain-from-tomorrow-weather-alert/
இருப்பினும் இந்த சிக்கலில் இருந்தும் நடிகர் (Amaran Issue) சிவகார்த்திகேயன் விரைவில் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை போராட்டங்களை தாண்டி அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு வெற்றியை தேடி தருமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்