நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் மறைந்து சில நாட்களே ஆன நிலையில் அவரது சமூக வலைதள கணக்கு (Account Name) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்
கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது .
இதையடுத்து கடந்த டிசம்பர் 26ஆம் தேதி உடல் நலைக்குறைவு காரணமாக மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி உயிரிழந்தார்.
சினிமா அரசியல் என இரண்டிலும் கொடிகட்டி பறந்த கேப்டன் விஜயகாந்தின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோக கடலில் மூழ்கடித்தது .
கேப்டனின் உடலுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காட்சியை பார்க்கவே கண்களில் நீர் தேங்கி நிற்கிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப் பிரபலங்களும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து தற்போது விஜயகாந்தின் நினைவிடத்தில் அவரது ரசிகர்கள் தொண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Also Read : https://itamiltv.com/twitter-review-ayalaan-is-good-or-not/
இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் மறைந்து சில நாட்களே ஆன நிலையில் அவரது சமூக வலைதள கணக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது .
இதனை கண்ட அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் எதற்காக இந்த (Account Name) பெயர் மாற்றம் என அதிர்ச்சியில் கூக்குரல் எழுப்பி வருகின்றனர் .
![Account Name](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/01/image-196.png?resize=610%2C450&ssl=1)