அடுத்த இரண்டு நாட்களுக்கு சூரியன் மிகவும் பிரகாசமாக இருக்கும் எனவும், இதனால் அதிக வெப்பத்தின் காரணமாக வெப்ப காற்று வெளியாகும் (solar storm) எனவும் நாசா எச்சரித்து உள்ளது.
கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி சூரிய புயல் (solar storm) பூமியை தாக்கும் எனவும், தொடர்ந்து ஏப்ரல் 25 ஆம் தேதி இன்னும் வலுவான வெப்பம் ஏற்படும் என்றும் நாசா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.
அதன்படி மக்கள் கூடுமானவரை வெளியில் செல்ல வேண்டாம் எனவும், அதிக அளவு தண்ணீர் குடித்து உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் நாசா அறிவுறுத்தி இருக்கிறது. மேலும், இந்த சூரிய புயலால் சூரியனால் வெளியிடப்படும் வெப்பமான காற்று மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் சூரியனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு ரேடியோ தகவல் தொடர்புகளில் தலையிட கூடும் எனவும் நாசா அறிவித்துள்ளது.
இந்த வகையான சூரிய புயல்கள் ஒரு பெரிய காந்தவெடிப்பு நிகழும் போது நிகழ்கிறது. இந்த புயல்கள் இணையம் முதல் ஆற்றல் வரை ஒவ்வொரு மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைப்பையும் பாதிக்கும் வகையில் உள்ளது.
மேலும், செயற்கைக்கோள்களை கூட அழிக்கும் ஆற்றலும் இந்த சூரிய புயலுக்கு உள்ளது. மேலும், வரும் 2025 ஆம் ஆண்டில் சூரிய சக்தியின் அதிகபட்ச அளவை நெருங்கும்போது சூரிய நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரிக்கும் எனவும்,
மேலும் இது பூமியில் உள்ள மனித வாழ்க்கை மற்றும் தொழில்நுட்பத்தையும் விண்வெளியில் இருக்கும் செயற்கை கோள்கள் மற்றும் விண்வெளி வீரர்களையும் கடுமையாக பாதிக்கும் எனவும் நாசா எச்சரித்து உள்ளது.