தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் தென் மாவட்டங்களுக்கு வரக்கூடிய ரயில் சேவையில் இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் – சென்னை எழும்பூர் இடையேயான ரயில் (20606) இன்று (டிச.20) கோவில்பட்டியிலிருந்து புறப்படும்.
நெல்லை – தாதர் விரைவு ரயில் மதுரையில் இருந்து இன்று புறப்படும்.
வெள்ளத்தால் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லை – சென்னை எழும்பூர் மற்றும் சென்னை எழும்பூர் – நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இன்று (டிச.20) ரத்து செய்யப்படுகிறது.
மதுரை – புனலூர் ரயில் நாகர்கோவிலில் இருந்து இன்று புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழையால் பல்வேறு ஏரி, கண்மாய்கள், குளங்கள் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்லாமல் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.