ஆந்திராவில், கள்ளகாதலுக்கு (illegal relationship) எதிர்ப்பு தெரிவித்த தந்தையை 21 வயது மகன் அடித்து உதைத்து சித்ரவதை செய்து அதனை தனது கள்ளக்காதலிக்கு வீடியோ காலில் லைவ் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோடு என்ற பகுதியில், வசித்து வருபவர் டில்லி பாபு. இவருக்கு 21 வயதில் பரத் என்ற மகன் உள்ளார். பரத் கூலி தொழிலாளராக வேலை பார்த்து வரும் நிலையில், அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்ற 39 பெண்ணுக்கும் இடையே உறவு (illegal relationship) ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜான்சிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், பரத்துடன் அவருக்கு உறவு ஏற்பட்டது அவரது தந்தை டில்லி பாபுவுக்கு தெரியவந்ததால், தனது மகனை டில்லி பாபு கண்டித்துள்ளார்.
ஆனால், அதை பொருட்படுத்தாத மகன் பரத், ஜான்சியுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த தந்தை டில்லி பாபு, இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, பரத், ஜான்சி இருவரையும் அழைத்து காவல் துறையினர் கவுன்சிலிங் கொடுத்துள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த பரத் தனது தந்தையை அடித்து பழிவாங்க போவதாக தனது காதலியிடம் கூறி விட்டு, வீட்டிற்கு வந்த பரத், அங்கிருந்த இரும்பு ராடால் தந்தை டில்லி பாபுவின் மண்டையை அடித்து உடைத்துள்ளார்.
மேலும், அதனை தனது காதலிக்கு வீடியோ கால் செய்து லைவில் காட்டியுள்ளார். இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் இருந்த டில்லி பாபுவை மீட்ட உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.