காங்கிரசில் நடிகர் சோனு சூட்டின் தங்கை இணைவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியான நிலையில் சோனு சூட்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜாத் சிங் சித்துவை சோனு சூட் சந்தித்த நிலையில் இணைவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆம் ஆத்மியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ அல்கா லம்பா “காங்கிரஸ் குடும்பத்திற்கு வரவேற்கிறோம்” என சோனு சூட்டுடன் எடுத்த செல்ஃபியை போட்டு டுவீட் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.