ரசிகர்களை தன் காந்தக் குரலால் கட்டிப்போட்ட எஸ்.பி.பியின் நினைவு தினம் இன்று

sp-balasubrahmanyam-first-year-death-anniversary-today

40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி தன்னுடைய குரலால் ரசிகர்களை மகிழ்வித்ததுடன், கின்னஸ் சாதனையும் நிகழ்த்தியுள்ள எஸ்.பி.பி. பல விருதுளையும் பெற்றுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்படுகிறது.

அரை நூற்றாண்டுக்கு மேலாக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த இந்த காந்த குரலுக்கு சொந்தக்காரர் தான் எஸ்.பி.பி. இவரின் பாடல்கள் மூலம் ரசிகர்கள் காதல் நட்பு சோகம் என எல்லா உணர்வுகளையும் உணர்ந்தார்கள். தமிழ் சினிமாவின் எம்ஜிஆருக்கு முதல் முதலில் இந்த குரல் ஒலித்தது.

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் தெலுங்கு தமிழ் ஹிந்தி மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். இவர் பெற்றுள்ள 6 தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனுக்கு கிடைத்த சான்று. இவர் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். உலகின் அதிக பாடல்களை பாடிய சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் ஒரே நாளில் 21 பாடல்களை பாடிய பாடகர் என்ற தகர்க்க முடியாத சாதனையையும் வசப்படுத்தினார்.

sp-balasubrahmanyam-first-year-death-anniversary-today
sp balasubrahmanyam first year death anniversary today

1991 ஆம் ஆண்டு எஸ் பி பாலசுப்ரமணியம் இசையமைத்து நடித்து வெளியான சிகரம் திரைப்படத்தில் நடிப்பு இசை என இரண்டு துறைகளிலுமே தனது புலமையை வெளிப்படுத்தி  பாடகராக மட்டுமல்லாமல் இசையமைப்பாளராகவும் தன்னுடைய முத்திரையை தமிழ் சினிமாவின் வலுவாக பதித்துள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

பாடகராகவும் நடிகராகவும் பல திரைப்படங்களில் வலம் வந்த எஸ்.பி பாலசுப்ரமணியம் கேளடி கண்மணி திரைப்படத்தில் மண்ணில் இந்த காதலன்றி பாடலையும், அமர்க்களம் திரைப்படத்தில் சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் பாடலையும் மூச்சுவிடாமல் பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.பத்மஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய இந்திய அரசின் மிக உயரிய விருதுகளை பெற்ற  எஸ் பி பாலசுப்ரமணியம், தலைமுறைகள் கடந்தும் தனது குரலை ரசிகர்கள் மனதில் தொடர்ந்து பதிய வைத்தவர். அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த காந்தக் குரலின் சொந்தக்காரர் எஸ்.பி.பி. காற்றில் கரைந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் ஆறாத வடுவாக தங்கி இன்றுடன் ஒருவருடம் கடந்து விட்டது.

Total
0
Shares
Related Posts