காய்கறி என நினைத்து உணவில் இருந்த இறந்து போன எலியின் தலையை தவறுதலாக சாப்பிட்டதாக இளைஞர் தெரிவித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
வெளிநாடுகளில் சூப்பர் மார்க்கெட்களில் குளிர்சாதன பெட்டிகளில் சேமிக்கப்படும் காய்கறிகள், இறைச்சி என உணவுப் பொருட்களைத் மக்கள் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.
இது போன்ற உணவுப் பொருட்களில் சில நேரங்களில் பூச்சிகள், பல்லிகள் போன்றவை இருப்பது போன்ற செய்திகளை படித்திருப்போம்.
அந்த வகையில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜூவான் ஜோஸ் என்ற இளைஞர் வாங்கிய உணவுப் பொருளில் செத்த எலியே இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை சாப்பிட்ட பின்னரே வித்தியாசமாக எதோ ஒரு பொருளை சாப்பிட்டு உள்ளதை அந்த இளைஞர் தெரிந்து கொண்டுள்ளார்.
அந்த இளைஞர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து உறைந்த காய்கறிகள் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கி வந்துள்ளார். வாங்கி வந்த உணவுப் பொருட்களை சமைத்து முடிந்த அந்த இளைஞர் அதை ஒரு தட்டில் போட்டு சாப்பிட்டுள்ளார்.
அப்போது எதோ வித்தியாசமான ஒரு பொருளை சாப்பிட்டு உள்ளதை உணர்ந்து கொண்துள்ளார் அந்த இளைஞர். முதலில் அது முள் முட்டைக்கோசு என நிலைத்த அவர், ஆனால் தனது தட்டில் இருந்த உணவில் இரண்டு கண்கள் இருப்பதை கண்டு அதிச்சி அடைந்துள்ளார். அபோது தான் அந்த இளைஞருக்கு தெரிந்துள்ளது தான் சாப்பிட்ட உணவில் ஏதோ ஒரு உயிரினம் இறந்து கிடப்பது என்பது.
பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் அதைக் காட்டியபோது அவருடைய தட்டில் இருந்தது செத்துப் போன எலி என்பது அவருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து இது தொடர்பாக குறித்த அந்த சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினர் மீது அந்த இளைஞர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.