தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 11ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இன்று முதல் 11ம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,575 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு மொத்தம் 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு 16,895 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இதுவரை ஏராளமான பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில் பயணிகளின் வரவு மேலும் அதிகரித்தால் தேவைக்கேற்ப மேலும் சில சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் . பயணிகள் அனைவரும் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.