பிரம்மாண்ட பொருட் செலவில் கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோயிலில் மூலவருக்கு சமர்பிப்பதற்காக 5000 அமெரிக்க வைரங்கள் வைத்த (Special Necklace) 2 கிலோ வெள்ளி நெக்லஸை உருவாக்கப்பட்டுள்ளது சற்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் கௌஷிக் காகாதியா தான் இந்த கண்கவரும் நெக்லஸை டிசைன் செய்துள்ளார் .
சுமார் 40கும் மேற்பட்ட திறமையான ஆசாரிகளை வைத்து 35 நாட்கள் மாங்கு மாங்கு என உழைத்து இந்த நெக்லஸ் உருவாக்கப்பட்டுள்ளது .ராமர், ஆஞ்சநேயர், சீதை, லட்சுமணன் உருவங்கள் கொண்டு . 2 கிலோ வெள்ளியில் நெக்லஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய அயோத்தி இராமர் கோயில் 235 அடி அகலமும், 360 அடி நீளமும், 161 அடி உயரமும் கொண்டதாக கோயில் அமைந்துள்ளது .
விறுவிறுப்பாக கட்டப்பட்டது வரும் இந்த கோயில் கட்டுமானப் பணி முழுமையடைந்தவுடன் இராமர் கோயில் வளாகம் உலகின் மூன்றாவது பெரிய இந்து ஆலயமாக இருக்கும்.
இது வட இந்திய கோவில் கட்டிடக்கலையின் சாளுக்கிய-குஜராத்தியப் பாணியில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக சில தகவல் வெளியாகி உள்ளது.
இப்படி பட்ட இந்த பிரம்மட கோவிலில் அமைய இருக்கு மூலவருக்கு இதுபோன்ற ஒரு பிரம்மாண்ட ஆபரணம் தயார் செய்ய பட்டுள்ள செய்தி சற்று வியப்பாக தான் உள்ளது.
இதுகுறித்து இந்த நெக்லஸை டிசைன் செய்த கௌஷிக் காகாதியா கூறியதாவது :
பிரம்மாண்ட பொருட் செலவில் கட்டப்பட்டு வரும் அயோத்தி ராமர் கோயிலில் மூலவருக்கு சமர்பிப்பதற்காக 2 கிலோ வெள்ளியை வைத்து ஒரு நெக்லஸை நாங்கள் உருவாக்கி உள்ளோம்.
Also Read : https://itamiltv.com/a-strong-earthquake-has-occurred-in-indonesia/
இந்த நெக்லஸில் 5000க்கும் மேற்பட்ட அமெரிக்க வைரங்கள் கொண்டு பொருத்தப்பட்டுள்ளன. (Special Necklace) மேலும் இதில் 2 கிலோ வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது.
புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலைக் கண்டு பரவசப்பட்டும் கடவுள் மேல் எனக்கு இருந்த பெற்றாலும் தான இந்த நெக்லஸை உருவாக்கினோம்.
நெக்லஸின் செயினில் ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் செதுக்கப்பட்டுள்ளது அதை பார்ப்பதற்கு நிச்சயம் கண்ணை கண்ணை கவரும் வகையில் இருக்கும் என கௌஷிக் காகாதியா தெரிவித்துள்ளார்.