திருப்பதில் சிறப்பு பூஜை எனக் கூறி பேராசிரியரை மர்ம கும்பல் ஒன்று ஏமாற்றிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு பூஜை செய்து தருவதாக ஃபேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை நம்பி பெங்களூருவைச் சேர்ந்த 59 வயதான பேராசிரியர் 5.2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார்.
மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க நினைத்து, விளம்பரத்தில் இருந்த எண்ணை தொடர்புகொண்டபோது கோயில் அர்ச்சகர் எனக் கூறி ஒருவர் பேசியதைக் கேட்டு 5.2 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார்.
Also Read : டிரம்ப் தலைமையின் கீழ் தமிழருக்கு முக்கிய பொறுப்பு..!!
இதையடுத்து சிறப்பு பூஜை எப்போது என அழைப்பைத்தராக பேராசிரியர் அந்த கும்பலை தொடர்புகொள்ள முயன்றபோது அவர்களிடம் இருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடித்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மர்ம கும்பலை பிடிக்க தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.