வரும் 18-ந்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
வரும் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை (18.09.23 – 22.09.23) வரை 5 நாட்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் முழுமையாக இதுவரை வெளியிடப்படவில்லை என்பதால் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நாளை சனிக்கிழமை (19.09.23) சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கூட்டத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.