விநாயகர் வழிபாட்டுக்கு சதுர்த்தி உகந்தது. சதுர்த்தி என்பது ஒரு திதி.ஒவ்வொரு மாதமும்வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற நாலாவது நாள் சதுர்த்தி ஆகும்.
ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் என்றால் தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்று பொருள்.
விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ளது.
பிள்ளையார் பூஜைக்கு அருகம்புல்லும் எருக்கம் பூவும் விசேஷமானதாகும்.
விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள், விநாயகரின் அருள் பெற்று அனைத்து நலன்களையும் சுகங்களையும் பெறுவார்கள்.
தீராத வினையை தீர்க்கும் மகா கணபதி மந்திரம்
மகா சக்தி தரும் கணபதி மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் தீராத வினைகள் யாவும் தீரும்.
முழு முதல் கடவுள் என விநாயகரை போற்றுவது தர்ம சாஸ்திரமாகும். எந்த செயலை தொடங்கும் போதும் விநாயகருக்கு பூஜை செய்வது மற்றும் ஹோமம் செய்வததாக இருந்தாலும் அதிலும் விநாயகர் தான் முதன்மையானவர்.
எந்த ஒரு தொழில் மற்றும் வியபாரம் தொடங்குவதற்கான கணக்கு ஆரம்பிக்கும் போதும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பதே விநாயகருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமாகும்.
மகா கணபதி மந்திரத்தை, எந்த நாளில் வேண்டுமானாலும் சொல்லி வேண்டிக்கொள்ளலாம். தினமும் நாம் வீட்டில் காலையிலும் மாலையிலும் சுவாமிக்கு நமஸ்காரம் செய்வது குடும்பத்திற்கு உகந்த ஒன்றாகும்.
பல வினைகளை போக்கும் சக்தி மிக்க மகா கணபதி மந்திரம்
‘ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லாம் கலௌம் கம் தோரண கணபதயே சர்வகார்ய கர்த்தாய ஸகல சித்திகராய ஸர்வஜன வசீகரணாய ருணாமோசன வல்லபாய ஹ்ரீம் கம் கணபதயே ஸ்வாஹா.’