முருகன் துதி:
முருகா! முருகா! வருவாய் வருவாய்!
கந்தா! குகனே! அருள்வாய் அருள்வாய்!
மயில் வாகனனே! ஷண்முகனே வருவாய்!
கௌரியின் மகனே அருள்வாய் அருள்வாய்!
சூரனை அழித்த வேலா வருவாய்!
வள்ளியை மணந்த குமரனே அருள்வாய்!
அக்னியில் உதித்த சோதியே வருவாய்!
சித்திகளைத் தரும் சித்தனே அருள்வாய்!
வேள்வியைக் காக்கும் சுவாமியே வருவாய்!
கங்கையின் மைந்தனே அருள்வாய் அருள்வாய்!
ரோகத்தைப் போக்கும்பழனி நாதனே வருவாய்!
வீரனான சுப்பிர மணியனே அருள்வாய்!
பிரமனைச் சிறைவைத்த பாலனே வருவாய்!
பக்தர்கர்ம வினைநீக்கும் சக்திதரனே அருள்வாய்!
குறிஞ்சித் தலைவனே வருவாய் வருவாய்!
அரும்பெரும் செல்வமே! அருள்வாய் அருள்வாய்!
முத்தமிழ் நாயகா அழகனே வருவாய்!
சத்தியம் தழைத்திட அருள்வாய் அருள்வாய்!
செந்தூர் அமர்ந்த செந்திலே வருவாய்
சந்ததி தழைத்திட அருள்வாய் அருள்வாய்!