hanuman jayanthi :அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகள் கொண்ட மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
தமிழ்நாடு முழுவதும் அனுமன் ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மார்கழி மாதம் அமாவாசையில் மூலம் நட்சத்திரம் வரும் நாளில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
அனுமான் கோயில்களிலும் பெருமாள் கோயில்களிலும் அனுமன் ஜெயந்தி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறை தசமி திதியன்று அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்.
ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். அந்த வகையில் இன்று தமிழகத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து 1 லட்சத்து எட்டு வடை மாலை சாத்த பட்டது.
நேற்று ஒரு டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை ஒரு லட்சத்து எட்டு வடமாலை சாத்தப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
இதனை அடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக நாமக்கல் போலீசாரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து இன்று பகல் 11 மணி அளவில் அபிஷேகங்கள் தொடர்ந்து தங்க காப்பு அலங்காரம் ஆஞ்சநேயருக்கு செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read :https://itamiltv.com/project-metro-rail-construction-made-new-record/
ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி, தந்தோ
ஹனுமன் ப்ரசோதயாத்’
என்ற இந்த அனுமன் காயத்ரி மந்திரத்தை உச்சரித்து சகல பாவங்களில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் நிவர்த்தி பெறலாம்.
Also Read :https://x.com/ITamilTVNews/status/1745321316289524197?s=20
அனுமன் பெயர் காரணம்:
சமஸ்கிருதத்தில் “ஹனு” என்பதற்கும் “தாடையும்”, “மன்” என்பதற்கு “பெரிதானது” என்பதால், “ஹனுமன்” என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்க் காரணம் உண்டு.
அனுமனுக்கு வேறு பெயர்கள்:
தமிழ்நாட்டில் அனுமன், அனுமார், ஆஞ்சநேயர் என்றும், கர்நாடகத்தில் அனுமந்தய்யா என்றும் ஆந்திராவில் ஆஞ்சநேயலு, சஞ்சீவய்யா என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். மகாராஷ்டிரத்தில் மாருதி, மஹாவீர் என்றும், உத்தரபிரதேசம் மற்றும் இந்தி பேசும் இடங்களில் பஜ்ரங்பலி என்றும் அழைக்கப்படுகிறார்.