ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி சீனாவில் ஜூன் 17 ஆம் தேதி முதல் 22 தேதி வரை நடைபெறுகிறது.பின்பு 22 தேதி முதல் 30 தேதி வரை இத்தாலியில் நடைபெறுகிறது.
இதில் வாள்வீச்சு போட்டியில் இந்தியாவிற்காக தமிழக வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். மேலும் சிறப்பாக விளையாடி காலிறுதி போட்டியில் உலக சாம்பியனான மிஸாகி எம்முறாவை வீழ்த்தினார்.
அதன் பிறகு உஸ்பேக்கிஸ்தான் வீராங்கனையிடம் 14-15 என்ற புள்ளி கணக்கில் பவானி தோல்வி அடைந்தார்.பின்னர் மூன்றாம் நிலை வீரரான உஷாகி ஷினியை 15-11 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதகத்தை வென்றுள்ளார்.
இந்திய வீராங்கனை ஒருவர் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்று சாதனை படைப்பது என்பது இதுவே முதல்முறையாகும்.
அந்த வகையில் தமிழக வீராங்கனை பவானி தேவி வரலாற்று சாதனையை ஏற்படுத்தி இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.