இலங்கையில் அதிபர் பதவியில் இருந்து ஜூலை 13ம் தேதி கோட்டபய ராஜபக்ச விலகுவதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் மருந்து, உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அதிய அவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச மற்றும் அதிபர் கோட்டபாய ராஜபக்ச ஆகியோர் பதவி விலக வேண்டும் என மக்கள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.
இதனைத் தொடர்ந்து தற்காலிக பிரதமராக ரணில் விக்கிரம சிங்க நியமிக்கப்பட்டார். இருந்த போதிலும் அத்திய அவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் அதிபர் கோட்டபாய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கை தலைநகர் கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், அதிபர் கோட்டபாய ராஜபக்சவின் மாளிகை மற்றும் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.
லட்சக்கணக்கான மக்கள் மாளிகையை முற்றுகையிட்ட நிலையில், அதிபர் கோட்டபாய ராஜபக்ச அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடினார். இதனைத்தொடர்ந்து அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றினர்.
இருந்தும் மக்களின் போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில், வரும் புதன் கிழமை அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக கோட்டபாய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கேவிடம் உறுதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னர் கூறியபடி வரும் ஜூ 13ம் தேதி அதிபர் பதவியில் இருந்து கோட்டபாய ராஜபக்ச விலகுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.