கொழும்பில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பொருளாதார நெருக்கடி நிலையினை அடுத்து அண்மைய நாட்களாக பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்து. இதனைத் தொடர்ந்து பிரதமரின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட கொழும்பில் கலவரம் வெடித்திருந்தது.
இந்த நிலையில் இன்று காலை அரசாங்க ஆதரவாளர்கள் அரச எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர். இந்தநிலையில், போராட்டக்காரர்களின் பகுதிக்குச் சென்ற மகிந்த ஆதரவாளர்கள் அங்கிருந்தவர்களை தாக்க முயற்சித்தனர். இதன்போது 17 பேர் காயமடைந்தனர்.
இதனால் ஏற்பட்டுள்ள அமைதியற்ற சூழ்நிலையில், காரணமாக கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் போராட்டக்காரர்களின் எதிர்ப்பை அடுத்து, பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியுள்ளார். மேலும் அவர், தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்த ராஜபக்சே ராஜினாமாவை தொடர்ந்து அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, சன்ன ஜயசுமன, ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.