சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திகுத்து சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய்க்கு அனுமதிக்கப்பட்ட தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கைதியால் சரமாரியாக குத்தியுள்ளார்.
கத்தி குத்தில் பலத்தகாயமடைந்த மருத்துவர் பாலாஜி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்நிலையில் மருத்துவரைக் கத்தியால் குத்திய விக்னேஷ் உள்ளிட்ட இருவரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில் கத்திக்குத்து விகாரத்தை கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவ கல்லூரிகளில் அவசரகால சிகிச்சை, உயிர் பாதுகாப்பு சிகிச்சை தவிர்த்து அனைத்து அரசு மருத்துவர்களும் காலவரையற்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.