அமைச்சர் பொன்முடி மட்டுமில்லை, ஒட்டுமொத்த தி.மு.க.,வும் வக்கிரமான, அசிங்கமான, அருவருக்கத்தக்கதை பேசக்கூடியவர்களே என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து மிகவும் ஒழுக்கமற்ற முறையில் பேசியது சொந்த கட்சியினரே கடுமையாக கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருந்து வரும் நிலையில் தற்போது பொன்முடிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
இழிசொல் பேசும் கூட்டத்துக்கு தலைமை வகிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைகுனிய வேண்டும். பொன்முடியை கட்சிப்பதவியில் இருந்து நீக்குவதன் மூலம் இதை கடந்து விடலாம் என்று நீங்கள் நினைத்தால் தவறு செய்வதாகவே அர்த்தம்.
ஹிந்து தர்மம் (சைவம், வைணவம்) மீது தி.மு.க., நடத்தும் இடைவிடாத தாக்குதலுக்கு பதிலடி கிடைத்தே தீரும். எங்கள் அமைதியை பலவீனம் என்று எண்ணிக்கொள்ள தேவையில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.