மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து தமிழ்நாட்டின் (EPS) உரிமையை திமுக அரசு நிலைநாட்ட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இ.பி.எஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
மேகதாது அணை குறித்து ஏற்கனவே கர்நாடக அரசின் முதல்வரும் துணை முதல்வரும் ஆட்சேபமிக்க கருத்துகளை கூறியும் .
இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதல்வர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனமாக இருந்த நிலையில், தற்போது “மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்” என்று கர்நாடக காங்கிரஸ் துணை முதல்வர் சிவகுமார் கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கூட்டணி தர்மத்திற்காக தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோகும் நிலையிலும் மவுனியாக (EPS) இருக்கும் இந்த விடியா திமுக அரசின் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய கடும் கண்டனம்.
ஏற்கனவே மேகதாது விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்க அனுமதித்த இந்த விடியா அரசு, இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்து உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்துகிறேன் என இ.பி.எஸ் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.