மங்கள்யான் திட்ட இயக்குனர் சுப்பையா அருணன்விற்கு(Subbiah Arunan) தமிழக அரசு உரிய அங்கீகாரம் வழங்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா அருணன் இஸ்ரோவின் “மங்கள்யான்’ செயற்கைகோள் பணியின், திட்ட இயக்குநராக செயல்பட்டதற்கு தமிழக அரசின் உரிய அங்கீகாரம் கிடைக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.
விண்வெளி துறையில் சாதனை படைத்த தமிழக விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசு தரப்பில் கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கில் உயர்கல்வி துறையின் சார்பில் ‘ஒளிரும் தமிழ்நாடு மிளிரும் தமிழர்கள்’ என்ற தலைப்பில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இஸ்ரோ இஸ்ரோ முன்னாள் தலைவர்கள் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் இதில் கே.சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வி.நாராயணன், ஏ.ராஜராஜன், எம்.சங்கரன், ஆசீர் பாக்கியராஜ், டாக்டர் எம்.வனிதா, டாக்டர் நிகார் ஷாஜி,டாக்டர் பழனிவேல் வீரமுத்து ஆகிய 9 பேரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி விருது வழங்கி கௌரவித்தார். மேலும் அவர்களுக்கு தல 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிலையில்,தமிழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி சுப்பையா அருணன்விற்கு இந்த அங்கீகாரம் கிடைக்காதது பேசு பொருளாக மாறி உள்ளது.
மங்கள்யான் திட்ட இயக்குனர் சுப்பையா அருணன் பத்மஸ்ரீ விருது பெற்று உள்ளார். மூத்த விஞ்ஞானியான நம்பி நாராயணனின் மருமகன் ஆவர். குறிப்பாக அருணன் சுப்பையா 25 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரோவில் சேர்ந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது பலரிடம் வளர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.