உலகின் மிகவும் ஆபத்தான ரயிலில் புதுமணத் தம்பதி ஒன்று ஃபோட்டோஷுட் நடத்தியுள்ளது தற்போது வைரலாகி வருகிறது.
திருமணம் என்றாலே ஃபோட்டோஷுட்- க்கு பஞ்சம் இருக்காது. ப்ரீ வெடிங் ஃபோட்டோஷுட், போஸ்ட் வெடிங் ஃபோட்டோஷுட் என எக்கச்சக்க ஃபோட்டோஷுட் நடக்கும். அதிலும் வித்தியாசமாக பிளேஸ் வித்தியாசமான போஸ் என அந்த அளவுக்கு இந்த ஃபோட்டோஷுட் இருக்கும்.
இது போல ஒரு வித்தியாசமான இடத்தில நடந்த ஃபோட்டோஷுட் தான் தற்போது வைரலாகி வருகிறது. குரோஷியாவைச் சேர்ந்தவர் 35 வயதான கிறிஸ்டிஜான் இலிசிக். இவரும் 29 வயதான அவரது மனைவி ஆண்ட்ரியா ட்ரகோவ்செவிக் கும் எடுத்த ஹனிமூன் ஃபோட்டோஷுட் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பயண விரும்பிகளான இந்த தம்பதி திருமண உடையில் இந்த ஃபோட்டோஷுட்டை நடத்தியுள்ளனர். 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயிலில் 200 பெட்டிகளுக்கும் மேல் உள்ளது. அத்தனை பெட்டிகளிலும் இரும்புத்தாது துகள்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்தின் வழியாக 700 கிலோ மீட்டர் தூரம் 20 மணிநேரம் செல்லக்கூடியது இந்த ரயில். அங்கு பகலில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் அதிகமாகவும், இரவில் ஜீரோ டிகிரி வெப்பநிலைக்கும் கீழாக குறைந்து புழுதிகள் அடங்கிய கடுமையான பயணமாக இருக்கும்.
இந்த ரயிலில்தான் புதுமணத் தம்பதி தங்களது திருமண புகைப்படங்களை எடுத்துள்ளனர். ஆபத்தான போஸ்கள் எல்லாம் கொடுத்து அந்த தம்பதி எடுத்த இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.