மொழியை முன்னிறுத்தி பிரிவினைகளை உருவாக்கும் முயற்சிகளை கைவிடுங்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய மொழிகளிடேயே விரோதம் எதுவுமில்லை என்றும், மொழிகளுக்கு இடையே பாகுபாடு காட்டுபவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350வது ஆண்டு மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் நூற்றாண்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது :
வீரம், வலிமை, அழகு, உணர்வு மற்றும் சமத்துவம் ஆகியவற்றை முற்றிலுமாக பிரதிபலிக்கும் மொழி மராத்தி என்று கூறினார்.
Also Read : லண்டனில் ஒரு ‘பட்ஜெட் பத்மநாபன்’ – இளம் பெண்ணுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!!
இவ்விழாவில் பிரதமர் மோடி பேசுகையில், “இந்திய மொழிகளிடையே எந்த விரோதமும் இல்லை. ஒவ்வொரு மொழியும் மற்றொரு மொழியை வளப்படுத்திக்கொண்டு இருக்கிறது.
மொழிகளுக்கு இடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதை தவிர்த்துவிட்டு, மொழிகளை வளப்படுத்துவது நமது சமூக பொறுப்பு. பழமையான நாகரிகங்களைக் கொண்ட நாடு இந்தியா. இது புதிய திட்டங்களையும் புதிய மாற்றங்களையும் உண்டாக்கியுள்ளது. உலகின் பழமையான மொழி கொண்ட நாடு என்பதற்கு இது சான்றாகும். இந்த மொழி பன்முகத்தன்மை நமது ஒற்றுமைக்கு மிக அடிப்படையான ஒன்றாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.