மத்திய கிழக்கு வங்கக்கடலில் ‘டானா’ புயல் உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அக்.21ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளது. இதை தொடர்ந்து இன்று காலை 23ஆம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றுள்ளது.
Also Read : ஏப்ரல்-2025 முதல் மின்சாரப் பேருந்துகள்- அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!!
இந்தப் புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த டானா (DANA) என்கிறு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது . வங்க கடலில் உருவாகி உள்ள இந்த புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.