மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த டாணா புயல், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கத்தின் பிதர்கணிகா – ஒடிசாவின் தாமரா இடையே தீவிர புயலாக கரையை கடந்தது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அக்.21ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உருவான இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து கடந்த 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுது.
Also Read : பட்டமளிப்பு விழாவை அமைச்சர்கள் புறக்கணிப்பது நல்லதல்ல – தமிழிசை
இதை தொடர்ந்து 23ஆம் தேதி மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த டானா (DANA) என பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையில் டாணா புயலானது , வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கத்தின் பிதர்கணிகா – ஒடிசாவின் தாமரா இடையே தீவிர புயலாக கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.