வங்க கடலில் புயல் உருவாகவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறுகிறது.
இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகும் இந்த புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ‘Fengal’ என்ற பெயர் சூட்டப்பட உள்ளது.
Fengal புயல், இலங்கை கடற்கரையை தொட்டபடி தமிழ்நாட்டை நோக்கி நகரும் இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read : நான் சும்மாதான இருந்தேன் – நண்பருக்கு உதவ சென்றவருக்கு நேர்ந்த சோகம்..!!
இந்த நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தஞ்சாவூர், திருவாரூர், நாகை. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆட்சியர்களுடன் காணொலியில் முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
புயல், மழையை எதிரிகொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.