ஆந்திர மாநிலத்தில் 18 மாதங்களே ஆன குழந்தையை நாய்கள் கடித்ததால் (dogs attacked) குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள மேட்டவலசா என்ற கிராமத்தில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று 18 மாத குழந்தை ஒன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த போது அங்கே இருந்த 5 தெரு நாய்கள் சேர்ந்து அந்த குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிய நிலையில் (dogs attacked), குழந்தை படுகாயமடைந்தது.
இந்த நிலையில், குழந்தையை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே அந்த குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து, உயிரிழந்த அந்த குழந்தை சாத்விகா எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.