ஒடிசா மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 53 மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பள்ளி ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோன வைரசால் பொது மக்கள் பாதிக்கபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவியது.
இதனை அடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் வித்திக்கபட்டன. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவல் குரவடைதாதா அடுத்து கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன.
அதன் வரிசையில் ஒடிசாவிலும் கட்டுபாடுகள் தளர்த்தப்பட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களில், சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியைச் சேர்ந்த 53 மாணவர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த பள்ளி மாணவர்களைத் தவிர எம்பிபிஎஸ் பயிலும் 22 மாணவர்களும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கொரோனா 3ம் அலை பரவ வாய்ப்பு இருப்பதாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.