கொரோனா காரணமாக திரை அரங்குகள் மூடப்பட்டதற்கு பின்னர் ஓடிடியில் படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை கோடிகளில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சமீப காலமாக பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வசூலை கொடுத்துள்ளது. திரையரங்கில் ஒரு படத்தை வெளியிட்டு லாபம் பார்ப்பதைவிட ஓடிடிக்கு படத்தைக் கொடுத்து லாபம் சம்பாதிப்பது எளிதாக இருப்பதால் முன்னணி நடிகர்களின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வருகின்றன.
அண்ணாத்த திரைப் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸுக்கு சன் நெக்ஸ்ட் என்ற ஓடிடி தளம் உள்ளதால் வேறு ஓடிடி தளங்களில் இப்படம் வெளியாக வாய்ப்பில்லை என்று கருதினர். ஆனால், அண்ணாத்த படத்தை நெட்பிளிக்ஸில் வெளியிட சன் பிக்சர்ஸ் அனுமதி அளித்துள்ளது.
அதுவும் படம் வெளியாகி மூன்று வாரங்களில் படத்தை வெளியிட அனுமதித்துள்ளது. நள்ளிரவு முதல் அண்ணாத்த தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் நெட்பிளிக்ஸில் பார்க்கக் கிடைக்கிறது.

அண்ணாத்த திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. வார இறுதியில் சில திரையரங்குகளில் அரங்குகள் நிறைந்ததாக செய்திகளும் வந்தன. இந்நிலையில், சிம்புவின் மாநாடு வெளியாகும் அதே தினத்தில் நெட்பிளிக்ஸில் அண்ணாத்தயை வெளியிட்டுள்ளனர்.