இந்தியாவின் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக ரிசர்வ் வங்கி அறிவிதுள்ளது.
பொதுவாக இரண்டாவது சனி ,ஞாயிற்றுக்கிழமை, நான்காவது சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாநில விடுமுறைகள், உள்ளூர் விடுமுறைகள் என வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கபடுகிறது.
வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து கொள்ளும் பட்சத்தில் அந்த வங்கிக் கிளைகளில் பணத்தை எடுக்க மற்றும் டெபாசிட் செய்யும் பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு மாத முடிவின் போதும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் டிசம்பர் மாத விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
டிசம்பர் மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்
அதன் படி 3 டிசம்பர் – புனித பிரான்சிஸ் சேவியர் விழா (பனாஜியில் வங்கிகள் மூடப்படும்.)
5 டிசம்பர் – ஞாயிறு
11 டிசம்பர் – சனிக்கிழமை ( 2வது சனிக்கிழமை)
12 டிசம்பர் – ஞாயிறு
18 டிசம்பர் – யு சோ சோ தாம் கீ இறந்த நாள் (ஷில்லாங் மட்டும்)
19 டிசம்பர் – ஞாயிறு
24 டிசம்பர் – கிறிஸ்துமஸ் பண்டிகை (ஐஸ்வாலில் மட்டும்)
25 டிசம்பர் – கிறிஸ்துமஸ்
26 டிசம்பர் – ஞாயிறு
27 டிசம்பர் – கிறிஸ்துமஸ் (ஐஸ்வாலில் மட்டும்)
30 டிசம்பர் – யு கியாங் நோங்பா (ஷில்லாங் மட்டும்)
31 டிசம்பர் – புத்தாண்டு (ஐஸ்வால் மட்டும்)
மேலும் ஆன்லைன் வங்கி சேவைகள் விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து செயல்படும் என்றும் இந்த நாட்களில் ஏடிஎம்கள், மொபைல் பேங்கிங் வசதியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.