ராகிங்கில் ஈடுபடமாட்டேன்” – மாணவர்களிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலை. முடிவு..!

ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவர்கள் ஆன்லைனில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. மாணவர், பெற்றோர் பாதுகாலவர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரிகளில் ராகிங் நடைபெறுவதை தடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சிலின் அறிவுறுத்தலின் அடிப்படையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இணையதளங்களில் மாணவர்களும், பெற்றோரும் பிரமாண பத்திரத்தை பதிவு செய்து அதையொட்டி வரும் மின்னஞ்சலை கல்லூரி அல்லது பல்கலைக்கழக சிறப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவர்கள் www.antiragging.in என்ற இணையதளத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்.

Total
0
Shares
Related Posts