மதிய உணவு தந்த “காமராஜர் போட்டோவாலேயே” காலை உணவு தந்த முதல்வர் ஸ்டாலின் படத்தை வரைந்த பணி நிரந்திரத்திற்காக காத்திருக்கும் பகுதிநேர ஓவிய ஆசிரியர்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்ததற்கு பாராட்டும் வகையிலும்,
நன்றி தெரிவிக்கும் வகையிலும், அதே நேரத்தில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டியும் “காமராஜர் ஐயா போலவே முதல்வர் ஸ்டாலின் ஐயா” என்பதை குறிக்கும் விதமாக மதிய உணவு தந்த “காமராஜர் போட்டோவாலேயே” காலை உணவு தந்த முதல்வர் ஸ்டாலின் படத்தை ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.
அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் காமராஜர். அவரது வழியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், பள்ளி இடைநிற்றலை தவிர்க்கும் வகையிலும் காலை சிற்றுண்டி திட்டத்தை கொண்டு வந்தார், மாணவர்களின் பசியை போக்கும் திட்டமாகும்.
இதை குறித்து ஓவிய ஆசிரியர் செல்வம் கூறுகையில் :-
காமராஜர் கண்ட கனவை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார், யார் நல்லாட்சி தந்தாலும், அது காமராஜர் ஆட்சிதான். முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார், மதிய உணவு தந்தவர் காமராஜர் ஐயா.. காலை உணவு தந்தவர் முதல்வர் ஸ்டாலின் ஐயா. காமராஜர் ஐயா போலவே முதல்வர் ஸ்டாலின் ஐயா ஆவார்.
அதே நேரத்தில் முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் பகுதிநேர ஆசிரியர்களான எங்களை “பணி நிரந்தரம்” செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
மதிய உணவுக்கு காமராஜர்.. காலை உணவுக்கு முதல்வர் ஸ்டாலின்.. காமராஜர் ஐயா போலவே முதல்வர் ஸ்டாலின் ஐயா என்பதை குறிக்கும் விதமாக காமராஜர் போட்டோவை நீர் வண்ணத்தில் தொட்டு “காமராஜர் போட்டோவாலேயே” முதல்வர் ஸ்டாலின் படத்தை ஆறு நிமிடங்களில் பகுதிநேர ஓவிய ஆசிரியர் செல்வம் வரைந்தார்.
இந்த ஓவியத்தை கண்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஓவிய ஆசிரியர் செல்வத்தை பாராட்டினார்கள்.