தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த ஆபரேஷன் இன்று அதிகாலை 1.05 மணி முதல் 1.30 மணி வரை நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்பு துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் தர்க்கத்தப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவ தளங்களை குறிவைத்து எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும் இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கிய ராணுவ பெண் அதிகாரி சோஃபியா குரேஷியின் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சோஃபியா குரேஷி ராணுவ பாரம்பரிய குடும்பத்திலிருந்து வந்தவர் . குஜராத்தில் பிறந்த கர்னல் சோஃபியா குரேஷி, உயிர் வேதியியலில் முதுநிலை பட்டம் பெற்றவர்.
Also Read : நாடு தழுவிய போர் ஒத்திகை…சென்னையில் தேர்வான 4 இடங்கள் – நடக்கப்போவது என்ன..?
இந்திய ராணுவத்தில் சோஃபியா 1999-ல் பணியில் சேர்ந்தார்; சோஃபியாவை திருமணம் செய்துகொண்டவரும் ஒரு ராணுவ வீரரே.
சோஃபியா, ஐநாவின் அமைதி குழுவில் 6 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் . கடந்த 2006-ல் காங்கோவில் அமைதியை நிலைநாட்ட அனுப்பப்பட்ட குழுவில் இடம்பிடித்தார்
2016ஆம் ஆண்டு 18 நாடுகள் பங்கேற்ற Exercise Force 18 அணிவகுப்பு ஒத்திகையில் இந்திய ராணுவத்தை வழிநடத்தியவர். அந்த ஒத்திகையில் இந்திய அணியை வழி நடத்திய ஒரே மற்றும் முதல் பெண் அதிகாரி சோஃபியாதான் .
லெப்டினன்ட் கர்னல் சோஃபியா குரேஷி, ஒரு பன்னாட்டு இராணுவப் பயிற்சியில் இந்திய இராணுவக் குழுவிற்கு தலைமை தாங்கிய முதல் முஸ்லிம் பெண் அதிகாரி ஆவார் . கார்ப்ஸ் ஆஃப் சிக்னல்ஸ் பிரிவில் சோஃபியா தற்போது அதிகாரியாக இருக்கிறார்