அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதே மாநிலம் இந்தூர் மாவட்டம் ஸ்வர்னா பக் காலனியில், 2 அடுக்களைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் தீ அருகில் உள்ள வீடுகளுக்கும் வேகமாக பரவியது.
இதனால் ஏற்பட்டதால் கரும்புகையால் குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் வெளியேறுவதற்கு வழி தெரியாமல் சிக்கிக்தவித்தனர். இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கிக் கொண்ட 9 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அனால் துரதிருஷ்டவசமாக தீயில் சிக்கி வெளியே வரமுடியாமல் போன 7 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியாகினர்.
இந்த திடீர் தீவிபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல்கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.