10 நாள் வேலையாக விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ள நிலையில் தற்போது விண்வெளியில் இருந்தபடியே புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நாசாவின் நட்சத்திர விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர்.
விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் இருவரும் பல மாதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். இருவரும் விரைவில் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா அறிவித்துள்ள நிலையில் தற்போது விண்வெளியில் இருந்தபடியே சுனிதா வில்லியம்ஸ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
Also Read : தெலங்கானா ஆணவப் படுகொலை வழக்கு – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் 9 மாதங்களுக்கும் மேலாக தங்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் 62 மணி நேரம் ஒன்பது நிமிடங்கள் விண்வெளி நடைப்பயணத்தை மேற்கொண்டவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
விண்வெளியில் தங்கியிருந்த காலக்கட்டத்தில் விண்வெளி நிலையத்தின் பராமரிப்பு, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். மேலும் நீர் மீட்பு, வெப்ப மேலாண்மை, தோட்டக்கலை, அறிவியல், தொழில்நுட்ப பரிசோதனைகள் என 900 மணி நேரத்திற்கும் மேலாக ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.