இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மேற்கொள்ள ( sunita williams ) இருந்த 3வது விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
பிரபல விண்வெளி வீராங்கனை கல்பனா சாவுலாவுக்கு பின் உலகளவில் பிரபலமான பெண் விண்வெளி வீராங்கனையாக வலம் வருபவர் சுனிதா வில்லியம்ஸ்.
அமெரிக்க கப்பல் படை விமானியான சுனிதா வில்லியம்ஸ், கடந்த 2006-ம் ஆண்டில் நாசா மூலம் முதல் முறை தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். அதனை அடுத்து 2012-ம் ஆண்டு இரண்டாவது முறையாக விண்வெளி சென்று திரும்பினார் .
Also Read : நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் – 5 நாட்களில் 1,022 வழக்குகள் பதிவு..!!
இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்று காலை 8.04 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ், தனது மூன்றாவது விண்வெளி பயணத்தை மேற்கொள்ள இருந்தார்.
ஆனால் அவர் பயணிக்க இருந்த விண்கலத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ( sunita williams ) ஏற்பட்டதாக கூறப்படுகிறித்து இதன்காரணமாக சுனிதா வில்லியம்ஸ் செல்ல இருந்த விண்வெளி பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக நாசா அறிவித்துள்ளது.