ஒரே துறையில் பணிபுரியும் குடும்பங்கள் எப்போதாவது இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். இதுபோன்ற நிகழ்வுகள் அரிய சாதனைகளாக மாறி வருகின்றன. அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. விமானிகளாக பணிபுரியும் தாய்-மகள் இருவரும் இணைந்து விமானத்தில் பறக்கும் அற்புதம் நிகழ்ந்துள்ளது
அமெரிக்காவின் சவுத் வெஸ்ட் ஏர்லைன்சில் இருவரும் பணி புரிகிறார்கள். தாயார் ஹோலி பெடிட், கேப்டன் அந்தஸ்தில் இருக்கிறார். மகள் கீலி பெட்டிட் முதல் நிலை அதிகாரியாக பணிபுரி கிறார்.
இருவரும் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்திலுள்ள டென்வரில் இருந்து செயிண்ட் லூயிஸ் நகருக்கு விமானத்தை இயக்கி இருக்கிறார்கள். இரு நகரங்களுக்கு இடையே விமான பயண தூரம் சுமார் 2 மணி நேரம். இதன் மூலம் அமெரிக்காவில் விமானம் இயக்கிய முதல் தாய்-மகள் என்ற பெருமையை பெற்றுள்ளார்கள்.
https://www.instagram.com/southwestair/?utm_source=ig_embed&ig_rid=facd2fb9-1f9e-49b8-8173-b6f0b9edc91f
இருவரும் விமானம் ஓட்டும் புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி இருக்கிறது. ”எங்களுக்கும், சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸுக்கும் இது உற்சாகமான நாள். மிகவும் சிறப்பான நாளும் கூட. சவுத் ஏர்லைன்ஸ் விமானத்தை இயக்கும் முதல் தாய்-மகள் நாங்கள்தான் என்பது பெருமிதமாக இருக்கிறது. என் கனவும் நனவாகி உள்ளது.
நான் இந்த தொழிலை காதலிக்கிறேன். என் பிள்ளைகளில் ஒருவர், என்னை பின்பற்றி இந்த தொழிலில் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இருவரும் இணைந்து விமானம் ஓட்டியது வரலாற்று நிகழ்வாக பதிவாகி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் ஹோலி.
ஹோலி கல்லூரி படிப்பை முடித்த பிறகு விமானப் பணிப்பெண்ணாகத்தான் தனது வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். திருமணமாகி குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு சிரமங்களுக்கு மத்தியில் விமான பணியை விரும்பி தொடர்ந்திருக்கிறார். விமானியாக வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கான பயிற்சி வகுப்பு களிலும் பங்கேற்றிருக்கிறார்.
பின்பு விமானி உரிமம் பெற்று பைலட்டாக மாறிவிட்டார். தாயாரை பார்த்து கீலிக்கும் விமானம் ஓட்டும் ஆசை பிறந்திருக்கிறது. தனது 14 வயதில் விமானி ஆக வேண்டும் என்று கனவு காண தொடங்கி இருக்கிறார்.
கடந்த 2017-ம் ஆண்டு பைலட் உரிமம் பெற்று விமான நிறுவனத்தில் பயிற்சியாளராக பணியாற்றத் தொடங்கினார். இதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு விமானியாக பணியமர்த்தப்பட்டிருக்கிறார் இந்த நிலையில் , இப்போதுதான் தாய்-மகள் இருவரும் ஒன்றாக இணைந்து விமானம் ஓட்டி இருக்கிறார்கள்.
ஹோலி கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் விமானப் பணிப்பெண்ணாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். திருமணமாகி குழந்தைகளைப் பெற்ற பிறகு, அவர் சிரமங்களை மீறி விமானத்தை விரும்பினார். பைலட் ஆவதற்கான பயிற்சி வகுப்புகளிலும் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில் , என் குழந்தை என்னைப் பின்தொடர்ந்து இந்தத் தொழிலில் சேருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் ஒன்றாகச் சென்ற விமானம் ஒரு வரலாற்று நிகழ்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் ஹோலி.