நம் அன்றாட உணவில் பச்சை காய்கறிகள், நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடையை Belly Fat ஆரோக்கியமாக குறைக்க முடியும்.
அந்த வகையில், விரைவில் உடல் எடையை Belly Fat குறைக்க உதவும் காய்கறிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
1.ப்ராக்கோலி :
ப்ராக்கோலியில் அதிக நார்ச்சத்து உள்ளதால் இது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. அதாவது, இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பினைக் குறைக்கச் செய்து உடல் எடையை குறைக்க உதவும்.
இதையும் படிங்க : “தமிழ்நாட்டை வஞ்சிக்காதே!” – திமுக & கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!
2.பாகற்காய் :
பாகற்காயில் குறைவான கலோரி மற்றும் ஃபைபர் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை ஜூஸ் செய்து அருந்தி வருவதால் எடை இழப்பிற்கு உதவுகிறது. மேலும், ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.
3.முட்டைக்கோஸ் :
முட்டை கோஸ் ஜூஸில் குறைவான கலோரி உள்ளது. இது உடலில் அதிகபடியாக கொழுப்பு சேராமல் தடுக்கிறது. முட்டை கோஸ் ஜூஸ் குடிப்பதால் உடல் உள்ளுருப்புகளில் படிந்திருக்கும் டாக்ஸின்களை அழித்து எளிதாக உடல் எடையை குறைக்க உதவும்.
4.பேரிக்காய் :
பேரிக்காயில் அதிக நார்ச்சத்தும், குறைந்த அளவு கலோரிகலும் உள்ளது. இதனை உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால் உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்குவதைத் தவிர்த்து உடல் எடையிலும் மாற்றத்தை உண்டாக்குகிறது.
5.தர்பூசணி :
தர்பூசணியில் மிக குறைவான கலோரிகளே உள்ளது. தர்பூசணி உட்கொள்வதால் கிடைக்கும் கலோரிகளை விட நமது உடல் அந்த தர்பூசணியை செரிமானம் செய்வதற்கு எடுத்துக் கொள்ளும் கலோரிகள் அதிகமாக இருப்பதால் இவை உடல் எடையை குறைக்க உதவுகிறது.
நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வருவதால் தொப்பை விரைவில் கரையும். இதற்காக ஓட்ஸ், ரொட்டி, ப்ரௌன் பிரட் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பொட்டாசியம் உடலில் குறைவாக இருந்தால் தான், தொப்பை போட ஆரம்பிக்குமாம். எனவே, பொட்டாசியம் உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஜங்க் உணவுகளான சிப்ஸ், பர்க்கர், பிரெஞ்சு ப்ரைஸ் போன்றவற்றை மறக்க வேண்டும். உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும்.
சரியான உடற்பயிற்சியுடன் மேற்கண்டவற்றை எல்லாம் சரியாக கடைபிடித்து வந்தால் ஒரே மாதத்தில் தொப்பை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.